வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:20 IST)

ரஃபேல் விமானங்கள் இன்று பாரம்பரிய முறைப்படி இந்திய விமானப்படையில் இணைப்பு

இந்திய விமானப்படைக்காக 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க 2016ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானங்களை கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொண்டார்.

இந்த விமானங்கள் கடந்த மே மாதமே இந்தியா வர இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் ஒப்படைப்பு பணி தாமதமானது.

இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கான ரஃபேல் விமானங்கள் ஐந்து பாரிஸிலிருந்து இந்தியா புறப்பட்டன. இந்த விமானங்களை இந்திய வீரர்களே இந்தியாவுக்கு இயக்கி கொண்டு வந்தனர். பின்னர், பாரிஸிலிருந்து  கிளம்பிய வந்த விமானங்கள் அரபு நாட்டில் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் புறப்பட்டு இந்தியா வந்தடைந்தன.

இந்நிலையில்  இந்த ஐந்து ரஃபேல் விமானங்கள் இன்று பாரம்பரியபடி இந்திய விமானப்படையில்  முறைப்படி இணைக்கபடவுள்ளது.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தில் விமானப்படைப் பிரிவான கோல்டன் அரோசிஸில்  5 ரஃபேல் விமானங்கள் இணைக்கப்படுகின்றன.

இவ்விழாவில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்,  முப்படைகளின் தலைமை தளபதி பிபில் ராவத், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளாரான்ஸ்  பார்லிமெண்ட் தலையிலான குழுவினர் பங்கேற்க வுள்ளனர்.