புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (19:38 IST)

'ராம்ப் வாக்' பயிற்சி செய்த பெண் உயிரிழப்பு : என்ன நடந்தது ?

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பீன்யா என்ற கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்த வந்த மாணவி ஒரு  மாணவி ராம்ப் வாக் பயிற்சி செய்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பீன்யா என்ற கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தவர் ஷாலினி (21).  இக்கல்லூரின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டி, சில பெண்கள் ’ராம்ப் வாக்’ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அதில், ஷாலினியும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்தார். அதனால் அங்குள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
மேலும். ஷாலினிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியானது.