திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (09:20 IST)

கொரோனா பாதிப்பிலும் தடையின்றி தொடரும் கட்டுமானம்! – ராமஜென்ம பூமி அறக்கட்டளை தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உள்ள நிலையில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடர்வதாக அதன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் கட்டுமான பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமஜென்ம பூமி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தியில் “ராமர் கோவில் கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இதுவரை சுமார் 1.20 லட்சம் கன மீட்டர் இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது கோவில் அடிதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், தொழிலாளர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்” என தெரிவித்துள்ளது.