”ராகுல் காந்தியை எம்.பி. ஆக்கினால் அது மோடிக்கு தான் நல்லது”.. ராமச்சந்திரகுஹா தாக்கு
கேரள மக்கள் அடுத்த முறை எம்.பி. ஆக்கினால் மோடிக்கே தான் நன்மையாக முடியும் என வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா விமர்சித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தனது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். எனினும் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய ராமச்சந்திரகுஹா, “ராகுல் காந்தி ஒரு கண்ணியமான மனிதர், தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் கேரள மக்கள் செய்த பேரழிவு காரியங்களில் ஒன்று ராகுல் காந்தியை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தது. அடுத்த முறையும் ராகுல் காந்தி எம்.பி. ஆனால், அது மோடிக்கே நன்மையாக முடியும்” என கூறியுள்ளார்.
மேலும், “மோடி 15 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை ஆண்டுள்ளார். ,மிகுந்த அரசியல் அனுபவம் உடைய மோடிக்கு இணையாக ராகுல் காந்தி ஒருபோதும் வர முடியாது” எனவும் கூறியுள்ளார்.