வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 2 மார்ச் 2015 (20:21 IST)

ராமர் கோவிலை வேறு வழிகளில் கட்டுவோம்: மத்திய அமைச்சர் கங்காராம் உறுதி

மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக அரசு அயோத்தியில் ராமருக்கு கோவில் எழுப்பும் விவகாரத்தில் அமைதியை கடைபிடித்து வருவதால் பின்வாங்கிவிட்டதாக அர்த்தம் இல்லை என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்துள்ளார்.
 
துகா பிர்ரா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
 
தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டுவதை பற்றி குறிப்பிடவில்லை என்றாலும் வேறு வழிகளில் கட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஏனென்றால், இது எங்கள் மரியாதை மற்றும் கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இது சம்பந்தமாக ஏற்கனவே பல காலமாக சாதுக்களும், மடாதிபதிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்துக்களும், முஸ்லிம் தலைவர்களும் இது தொடர்பாக அரசுடன் பேசியிருக்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, ராமர் கோவில் விவகாரத்தை எப்போதும் பேசிக்கொண்டிருப்பது சரியானதல்ல.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.