1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (08:58 IST)

பிரியாணி தட்டில் ராமர் படம்.. ஓட்டல் உரிமையாளர் கைது! – டெல்லியில் பரபரப்பு!

Ramar Plate
டெல்லியில் ராமர் படம் போட்ட தட்டில் பிரியாணியை விற்பனை செய்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி என்ற இடத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சமீபத்தில் சிலர் பிரியாணி சாப்பிட சென்றபோது ராமர் படம் போட்ட பேப்பர் பிளேட்டில் பிரியாணி வைத்து தரப்பட்டுள்ளது. ராமர் படத்தில் பிரியாணியை வைத்துக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோபமடைந்த மக்கள் பலர் உணவகம் முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்து மக்களை சமாதானப்படுத்திய போலீஸார் உணவக உரிமையாளரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம் விசாரித்ததில், சாப்பாட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் ஆலையிலிருந்தே பேப்பர் ப்ளேட்டுகள் வருவதாகவும், அதில் சிலவற்றில் தற்செயலாக ராமர் படம் இடம்பெற்றிருந்ததும் தெரிய வந்துள்ளது. பின்னர் அவரை போலீஸார் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K