16 இடங்களில் இன்று மாநிலங்களவை தேர்தல்!!
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி வரும் ஜூன் 22 ஆம் தேதி காலியாகிறது. இதையடுத்து மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 எம்.எல்.ஏ.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் எஞ்சிய 16 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் 6, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 4, ஹரியானாவில் 2 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் இந்த 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.