Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மம்தா பானர்ஜியின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி: மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பு

Last Modified வியாழன், 30 நவம்பர் 2017 (07:49 IST)
தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவதி; திரைப்படத்திற்கு இந்தியாவின் முக்கிய மாநிலங்கள் தடைவிதித்துள்ள நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் துணிச்சலாக 'பத்மாவதி' படத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு, மேற்குவங்கத்தில் இந்த படம் திரையிட அனைத்து பாதுகாப்பு வசதியும் செய்து கொடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே தீபிகா படுகோனே, இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி ஆகியோர்களின் தலைக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசு என அறிவித்துள்ள நிலையில் தற்போது மம்தாவின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு என ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த சர்ச்சைகுரிய அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :