வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (08:57 IST)

பிரான்ஸில் ரஃபேல் விமானங்களுடன் ஆயுதபூஜை – ராஜ்நாத் சிங் திட்டம் !

ரஃபேல் விமானங்களுடன் பிரான்ஸில் ஆயுத பூஜைக் கொண்டாட்டத்தை மேற்கொள்ள உள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இன்று நாடு முழுவதும் ஆயுதபூஜைக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து ஆயுத பூஜை பண்டிகைக் கொண்டாட்டங்கள் மத்திய அரசு அலுவலகங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு பிரான்ஸில் ரஃபேல் விமானங்களோடு ஆயுத பூஜைக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பிரான்ஸில் உள்ள மெரிக்னா பகுதியில் இன்று நடக்கும் ரஃபேல் விமான ஒப்படைப்பு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ப்ளோரண்ட்ஸ் பார்லி கலந்துகொள்ளும் நிகழ்வில் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகச் செய்தி தொடர்பாளர் பரத் புருஷன் பாபு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் 36 ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவிடம் ஒப்படைக்கிறது. ஆனால் மீதமுள்ள பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு மே மாதம்தான் விமானங்கள் இந்தியாவுக்கு வரும் எனத் தெரிகிறது.