1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி/சுரேஷ்/தமிழ்
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (14:17 IST)

2015-2016 ரயில்வே பட்ஜெட் உரை மற்றும் அறிவிப்புகள் - முழு விவரம்

2015-2016 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ரயில்வே பட்ஜெட் உரை மற்றும் அறிவிப்புகளை இந்த செய்திச்சரத்தில் காணலாம்.

==============================================================================================

இத்துடன் உடனுக்குடன் செய்திச்சரம் முற்றுப் பெறுகிறது.

==============================================================================================

துறைமுகங்களுக்கிடையிலான இணைப்பு ரயில் பாதை அமைக்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சர்வதேச தரத்திற்கேற்ப ரயில் எஞ்சினின் ஓசை குறைக்கப்படும்.

ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

21 ரயில்வே பணியாளர் நியமன வாரியங்கள் அமைக்கப்படும்.

புதிய இரயில்கள் இல்லை. ஆய்வுகள் முடிந்த பிறகே புதிய ரயில்கள் அறிவிக்கப்படும்.

பயணிகள் வசதிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு.

புதிய ரயில் பற்றிய அறிவிப்பு எதுவும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

புதிய ரயில்களை அறிவிப்பது பற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் அறிவிக்கப்படும்.

==============================================================================================

ரயில் மோதலைத் தடுக்க சில வழித்தடங்களில் நவீன வசதி செய்யப்படும்.

செலவீனங்களுக்கான நிதி 1.1 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.

ரயில் ஊழியர்கள் குடியிருப்பு முழுவதும் பழுது பார்க்கப்படும்.

ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பதைத் தடுக்க டிஜிட்டல் மேப் முறை கொண்டுவரப்படும்.

வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு ரயில்களின் ஒலி அளவு குறைக்கப்படும்.

ரயில்வே சொத்துக்களின் விற்பனை தவிர்க்கப்படும்.

ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்.

எரிசக்தி பயன்பாட்டைக் கண்காணிக்க தனி வாரியம்

ஏலத்தில் மின்சாரம் வாங்குவதன் மூலம் 3000 கோடி மிச்சமாகும்

மாநிலங்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப ரயில் நிலையங்களின் கட்டமைப்பு சீரமைக்கப்படும்.

ரயில்வே கட்டடங்களில் சூரிய மின்சக்தி பொருத்தப்படும்.

==============================================================================================

புதிய இரட்டைப் ரயில் பாதைக்கு 96,182 கோடி

நாடு முழுவதும் 4 இடங்களில் ரயில்வே ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே கூட்டுத் திட்டங்கள்

தனியார் அரசு பங்கேற்புடன் ரயில்வே திட்டங்கள் செயல்படுத்த முடிவு.

வெளிநாட்டு தொழில்நுட்பத்தைப் பெற்று ரயில்வே துறை மேம்படுத்தப்படும்.

970 தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

காகிகதம் இல்லாத மின்னணு முறை அமல்படுத்தப்படும்.

==============================================================================================

9 வழித்தடங்களில் அதிவேக சரக்கு ரயில்பாதை அமைக்கப்படும்.

பயணிகள் பாதுகாப்பு தொலைப்பேசி எண் 182

பெண்கள் மற்றும் முதியோருக்கு படுக்கை வசதி கொண்ட டிக்கெட் பெற எளிமைப்படுத்தப்படும்.

உணவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.

==============================================================================================

சிறப்பான விளக்கு வசதிகளுடன் பெட்டிகளின் உட்கட்டமைப்பு மாற்றப்படும்.

முக்கிய ரயில்களில் படுக்கை வசதி இருக்கைகள் அதிகரிக்கப்படும்.

9400 கி.மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதைகள் அகலப்பாதையாக மாற்றப்படும்.

சரக்குப் போக்குவரத்திற்கு என்று தனிப்பாதைகள் அமைக்கப்படும்.

எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் ரயில்பெட்டி தயாரிக்கப்படும்.

சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.

9 வழித்தடங்களில் ரயில்களின் வேகம் 160 கி.மீட்டருக்கு அதிகரிக்கப்படும்.

ஆளில்லா லெவல் கிராசிங் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் இரயில் வசதி அதிகரிக்கப்படும்.

==============================================================================================
 
மேலும் தகவல்கள் அடுத்த பக்கம்...

முன்பதிவு டிக்கெட்டுக்கான கால அவகாசம் 120 நாட்களாக நீட்டிக்கப்படும்.

சாமானியர்களைத் தொடர்பு கொள்ள எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்படும்.

புறநகர் பயணிகளுக்கு சாட்டிலைட் ரயில்வே முனையம் அமைக்கப்படும்.

சரக்கு ரயில்களுக்கு இரண்டு தனிப்பாதைகள் அமைக்கப்படும்.

ரயில் நிலையங்களை நவீனப்படுத்த தனியாருக்கு அனுமதி

6208 கி.மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்படும்.

1200 கி.மீட்டர் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

மெட்ரோ ரயில் வசதி 120 கி.மீட்டர் முதல் 200 கி.மீட்டர் வரை நீட்டிக்கப்படும்.

==============================================================================================

பயணச்சீட்டு வழங்க தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்படும்.

பொதுப்பெட்டிகளில் செல்போன் சார்ஜர் வசதி செய்து தரப்படும்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி செய்யப்படும்.

உணவுத் தரத்தை உயர்த்த சிறந்த உணவகங்களுடன் கூட்டணி அமைக்கப்படும்.

பயணிகளை அழைத்து வரவும், உரிய இடத்தில் இறக்கிவிடவுமான திட்டம் பரிசீலனையில் உள்ளது.

முக்கிய ரயில் நிலையங்களில் Wi-Fi வசதி செய்யப்படும்.

பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புல்லட் போன்ற புதிய ரயில்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும்.

==============================================================================================

ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள தனித்துறை அமைக்கப்படும்.

650 ரயில் நிலையங்களில் பசுமைக் கழிப்பறைகள் கட்டப்படும்.

17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும்.

24 மணி நேரமும் செயல்படும் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான உதவி எண் 138

குறை தீர்க்க மொபைல் அபிளிகேசன் மார்ச் 1 முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

முன் பதிவு செய்த 5 நிமிடங்களில் டிக்கெட்டை பெறும் வசதி செய்யப்படும்.

109 ரயில் நிலையங்களில் மின்னணு முறையில் உணவு வழங்கப்படும்.

ஸ்மாட்போன் மற்றும் தொலைபேசி மூலம் முன்பதிவு இல்லா டிக்கெட்கள்

ரயில் புறப்படு மற்றும் வருகை நேரம் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும்.

==============================================================================================

ரயில் பாதை அகலப்படுத்துதல் மற்றும் மின் மயமாக்கல் அதிகரிக்கப்படும்.

தரத்தை மேம்படுத்த 20 ஆயிரம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

பயணிகள் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.

சரக்கு போக்குவரத்தில் 100 கோடியிலிருந்து 150 கோடி வரை எடுத்துச் செல்லப்படும்.

பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

5 ஆண்டுகளில் 4 அடுக்கு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நிதி சேவையில் தன்னிறைவு பெறப்படும்.

கூடுதல் முதலீடுகளால் வேலைவாய்ப்பு பெருகும்.

==============================================================================================