1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (17:43 IST)

பாஜகவை எதிர்த்து போராட ’இவங்க’ போதும் - ராகுல் சவால் !

சமீபத்தில் நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியைப்பிடித்தது. நேற்று முந்தினம் டெல்லியில் உள்ள ஜனாதிபது மாளிகையில் ஜனாதிபதி மின்னிலையில்  மோடி பிரதனராகப் பொறுப்பேற்றார். அவருடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுவோரும் பதவியேற்றனர்.இதையடுத்து நேற்று பிரதமர் மோடி தனது பணியை தொடங்கி சில அதிரடி அறிவிப்புகளை மத்திய அமைச்சகத்தின் வாயிலாக வெளியிட்டார்.
இந்நிலையில் லோக்சபாவில் ஆளும்  பாஜகவை தினம் , தினம் கேள்வி கேட்பதற்கும், அவர்களை எதிர்ப்பதற்கும் நம்மிடம் 52 எம்பிக்கள் உள்ளனர். அதுபோதுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுன்றத்துக்கான புதிய தலைவரை தேர்வு செய்தற்காக ராகுல் தலைமையில் காங்கிரஸ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று காலையில் கூடியது. இதில் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
 
இதனையடுத்து பேசிய ராகுல்காந்தி : நம்மிடம் 52 எம்பிக்கள் உள்ளனர். இந்த 52 பேரும் பாஜகவை எதிர்த்துப் போராடுவார்கள்...  பாஜகவை எதித்துக் கேள்வி கேட்க நம்மிடம் 52 எம்பிக்கள் இருக்கிறார்கள் அது போதும் என்று தெரிவித்தார்.