புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (08:28 IST)

மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் ராகுல்? கட்சியில் அதிரடி மாற்றங்கள்!

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்து இளைஞர்களை முன்னேற்றி விட சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறாரா, ராகுல் காந்தி. 
 
மக்களவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் தோல்விக்கான காரணத்தையும், கட்சியில் வேறு சில மாற்றங்களையும் கொண்டுவர முடிவு செய்துள்ளாராம் ராகுல் காந்தி. 
 
தற்போது கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் டெல்லி திரும்பியதும், மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு என பிராந்தியங்களை உருவாக்கி அதற்கு செயல் தலைவர்களை நியமித்து கட்சியின் செயல்பாடுகளில் ராகுல் காந்திக்கு உதவலாம் என யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 
ஆனால், இந்த யோசனையை பரிசீலிக்க எந்த ஒரு அடுத்தக்கட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் ராகுல் டெல்லி வந்ததும் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 
 
அதோடு, தேர்தலில் முழுமனதுடன் உழைக்காத மூத்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்து இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.