திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜூலை 2020 (12:11 IST)

பெரியார் மீது காவி: ராகுல் காந்தி தமிழில் டிவிட்!!

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து ராகுல் காந்தி தமிழில் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார். 
 
கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போலீஸாரிடம் தாமாக முன்வந்து சரணடைந்தார்.  
 
இது தொடர்பாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது, கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில், இந்து கடவுள் முருகனை பற்றி இழிவாக பேசியதற்கு எதிர்ப்பை தெரிவிக்க பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசியதாக கூறினார். மேலும், அருண் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி, எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என தமிழில் டிவிட் போட்டுள்ளார்.