அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!
முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது ஸ்ரீபெரும்புதூர் அருகே கொல்லப்பட்டார். அவரது மறைவால் நாடே அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று அவரது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தந்தையின் நினைவு நாள் குறித்து ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் அப்பா உங்களது கனவுகள் எனது கனவுகள், உங்களது ஆசைகள் எனது ஆசைகள், உங்களது நினைவுகள் என் நெஞ்சுக்குள்ளே என்றென்றும் இருக்கும் என்று பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தனது அஞ்சலியை பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva