திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (09:23 IST)

காங்கிரஸ் மாதிரி முரண்பட்ட தலைவர்கள் உள்ள கட்சி வேறு இல்லை! – சொந்த கட்சியை விளாசிய ராகுல்காந்தி!

கடந்த சில ஆண்டுகளாக மக்களவை, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் காங்கிரஸில் உள்ள முரண்பாடு குறித்து ராகுல்காந்தியே பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் பல்வேறு தேர்தல்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர் “காங்கிரஸில் உள்ளது போல பல்வேறு கருத்துகள், முரண்பாடுகள் கொண்ட தலைவர்களை நீங்க பாஜகவில் கூட பார்க்க முடியாது. ஆனாலும் அவர்கள் காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்” என பேசியுள்ளார்.