செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 9 நவம்பர் 2019 (16:26 IST)

”அனைவரும் மதநல்லிணக்கத்தை காக்க வேண்டும்”.. ராகுல் வலியுறுத்தல்

அயோத்தி வழக்கில் அனைவரும் மத நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வலியுறுத்தல்

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, மசூதி கட்டுவதற்கு இஸ்லாமியர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்திர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். மேலும் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் மத நல்லிணக்கத்தோடு தீர்ப்பு வழங்கியுள்ளதாக பல அரசியல் தலைவர்கள் கூறிவருகிற நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்தி “மதநல்லிணக்கத்தை பேணி காப்போம்” என குறியுள்ளது குறிப்பிடத்தக்கது.