1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஜூலை 2023 (08:24 IST)

முதலமைச்சரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது.. ராகுல் காந்தி விமர்சனம்..!

rahul gandhi
தெலுங்கானா முதல்வரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சியை அடுத்ததாக தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அந்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி  கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் நேற்று தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது என்று அவர் பாஜக பி டீம் தான் என்றும் தெரிவித்தார். 
 
சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சியினர் மீது ஊழல் புகார்கள் உள்ளது என்றும் அதற்கு அஞ்சி தான் அவர் பாஜகவுக்கு துணையாக செயல்பட்டு வருவதாகவும் கூறுகிறார். தேசிய அளவில் உருவாகும் எதிர்க்கட்சி கூட்டத்தில் கேசிஆர் கட்சி கலந்து கொண்டால் காங்கிரஸ் பங்கேற்காது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
Edited by Siva