திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 14 டிசம்பர் 2024 (16:13 IST)

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

Rahul Gandhii
தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள் என மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மக்களவையில் இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றிய போது, "இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே மிக நீண்ட காலம் எழுதப்பட்ட அரசியல் சாசனம்" என்று மக்கள் நம்புகின்றனர் என்றார்.
 
அவரது உரையில், "அரசியல் சாசனத்தை திறந்தால் அதில் அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் குரல்களை  கேட்க முடியும். இது நம் நாட்டின் ஆழமான பாரம்பரியத்தில் இருந்து வந்தது. அரசியல் சாசனத்துக்கு பதிலாக 'மனு ஸ்மிருதி' நாடு வழி நடத்தப்பட வேண்டும் என்று கூறியவர் சாவர்க்கர். உங்கள் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்று கேள்வி எழுப்பினார்.
 
"தாராவியை அதானிக்கு தாரை பார்த்து விட்டீர்கள். தாராவி பகுதியிலுள்ள சிறு வணிகர்களின் விரல்களை வெட்டி விட்டீர்கள். நாட்டில் உள்ள விமானங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு நிறுவனங்களை அதானிக்கு கொடுத்து விட்டீர்கள். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் விரல்களை துண்டித்து விட்டீர்கள். நாட்டில் 70 முறை வினாத்தாள்கள் கசைவு நடைபெற்றுள்ளது. வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் விரல்களையும் வெட்டி விட்டீர்கள்" என்று ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசமாக பேசினார்.
 
 
Edited by Mahendran