வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 7 மே 2015 (14:44 IST)

ராகுல் காந்தி மீதான வழக்கு: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 
பாஜக அரசுசையும், அதற்கு துணையாக இருக்கும் சங்பரிவார் அமைப்புகளையும், கடந்த சில நாட்களாக,  அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்ச்சனம் செய்து வருகின்றார். 
 
இந்நிலையில், மகாத்மா காந்தியை சுட்டது ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்ச்சனம் செய்தார். 
 
இதற்கு,  ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.  மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது அவதூறு வழக்கை மும்பை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. 
 
தன்மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மும்பை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. 
 
இதனால், தன் மீதான வழக்கிற்கு தடை கோரி ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிற்கு இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.