1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஆஜர்!

Rahul Gandhi
கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. 
 
அமலாக்கத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை செய்த நிலையில் மேலும் விசாரணை செய்ய ராகுல்காந்தி கால அவகாசம் கேட்டார் 
 
ராகுல்காந்தி அவர்களின் தாயார் சோனியாகாந்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டுமென அவகாசம்  கேட்டதால் அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ராகுல்காந்தி ஆஜராக உள்ளார். இன்று நான்காவது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது