1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (15:51 IST)

பாஜக ஐடி விங்கை வீழ்த்த ராகுல் காந்தி திட்டம்! – உண்மைக்கான ராணுவம் ஐடி விங்கிற்கு அழைப்பு!

மக்களிடையே வெறுப்புணர்வு, அவதூறை பரப்பும் பாஜக ஐடி விங்கை வீழ்த்த உண்மைக்கான ராணுவத்தில் இணைய வேண்டும் என ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெருவாரியாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி விவசாய போராட்டம் மற்றும் பல விவகாரங்களில் பாஜக சார்பான கருத்துகளை மீம்களாக, போஸ்டர்களாக பாஜக ஐடி விங் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டின் ஒற்றுமையை குலைத்து, வெறுப்புணர்வையும், அவதூறையும் பரப்பும் வகையில் பாஜக ஐடி விங் செயல்படுவதாகவும், இதற்காக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ள ராகுல் காந்தி, நாட்டு நடப்பின் உண்மை தன்மையை மக்களிடம் கொண்டு செல்ல இளைஞர்கள் உண்மைக்கான ராணுவத்தில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்படும் இந்த ஐடி விங்கை நாடெங்கும் எடுத்து செல்லவும், ஆட்களை நியமிக்கவும் ராகுல்காந்தி தீவிரம் காட்டி வருகிறார். குறைந்தது நாடு முழுவதும் 5 லட்சம் பேரையாவது இந்த ஐடி விங்கில் இணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான நேர்க்காணால்கள் போன்றவை விரைவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.