ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (20:55 IST)

முதலமைச்சரை தேர்வு செய்ய லியோ டால்ஸ்டாயை குறிப்பிட்ட ராகுல்காந்தி

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றி வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு அடிப்படையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மூன்று மாநில தேர்தலில் வெற்றி பெற்ற ராகுல்காந்தியால் மூன்று மாநில முதல்வர்களை தேர்வு செய்ய முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு அல்லது மூன்று முதல்வர் வேட்பாளர்கள் தங்களுக்கே முதல்வர் பதவி வேண்டும் என்று கூறுவதால் முதல்வர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் ராகுல்காந்தி ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் மத்தியபிரதேச மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் ஆகியோர்களின் நடுவில் உள்ள ராகுல்காந்தி, காலமும், பொறுமையும் இருபெரும் வீரர்கள் என்ற லியோ டால்ஸ்டாய் பொன்மொழி ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதில் இருந்து இந்த இருவரில் ஒருவர் தான் மபி முதல்வர் என்று கோடிட்டுள்ள ராகுல்காந்தி நாளை தனது இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.