வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (15:20 IST)

வயநாடு நிலச்சரிவு: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய ராகுல் காந்தி..!

Rahul Gandhi
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு   தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி X தளத்தில் கூறியபோது, வயநாடு மக்கள் பேரழிவை அனுபவித்திருக்கிறார்கள், கற்பனைக்கும் எட்டாத இழப்புகளில் இருந்து வயநாடு மக்கள் மீண்டு வர நமது ஆதரவு தேவை. 
 
பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கு உதவுகிற வகையில் எனது ஒரு மாத சம்பளத்தை கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். இந்தியர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறிதளவு நிதியும் பெரும் உதவியாக அமையும். வயநாட்டு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நாமும் உதவுவோம்’ என்று ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 400க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு வாசலை இழந்து நடுத்தெருவுக்கு வந்து முகாம்களில் தங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் முன்னாள் வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி தனது பங்களிப்பை அளித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பலர் அதனை தொடர்ந்து நிதி வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran