வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 7 ஜூலை 2014 (19:56 IST)

நாடாளுமன்றத்தில் அவமானம், அவமானம் என கோஷமிட்ட ராகுல்: பாஜக ராஜீவ் பிரதாப் ரூடி ஆச்சரியம்

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் கோஷம் எழுப்பியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
 
16 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கடும் அமளியில்  ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கட்டுபடுத்தாத மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை அளிக்க வேண்டும் என்று காங்கிரசார் வலியுறுத்தினர். கடும் அமளியினால் மக்களவை 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மக்கள் அங்கீகாரம் பெறாத போதிலும் பதவியை அடைய தீவிரமாக உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி விமர்சித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் 'அவமானம்-அவமானம்' என்று கோஷம் எழுப்பியது எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர் தற்போது இதுபோன்று பேசுகிறார் என்று ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.