வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (19:07 IST)

மோடியின் மேஜிக் ரயில்: புல்லட் ரயில் திட்டத்தை கேலி செய்யும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான அமேதிக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு விவசாயி தனது நெல்லை விற்க சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
எனவே, அந்த ராகுல் காந்தி அந்த விவசாயியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அங்கிருந்து வரும் போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டி பின்வருமாறு...
 
பிரதமர் மோடி புல்லட் ரயில் திட்டம் குறித்து பேசி வருகிறார், உண்மையில் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வராது. அது ஒரு மேஜிக் திட்டம் என கேலி செய்தார். 
 
மேலும், அமேதி தொகுதியில் இருந்து 250 இளைஞர்களைத் தேர்வு செய்து, சமூக ஊடகத்தை திறம்பட இயக்குவது, பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கவும் முடிவு செய்து அதற்கான ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.