திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (19:11 IST)

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது தாய், மகள் பலி: ராகுல் காந்தி காட்டம்..!

rahul gandhi
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து கொண்டு வந்த போது தாய் மகள் பலியான சம்பவம் குறித்து ராகுல் காந்தி காட்டமாக கேள்வி தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் அரசின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்ற போது திடீரென ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் தாய் மகள் என இருவரும் பரிதாபமாக பலியாகினர். 
 
இது குறித்து தனது வேதனையை தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அதிகாரத்தின் ஆணவம் மக்களின் வாழும் உரிமையை பறிக்குமானால் அதற்கு பெயர் தான் சர்வாதிகாரம் என்றும் கான்பூரில் நடந்த இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த புல்டோசர் கொள்கை அரசின் முகமாக மாறி உள்ளது என்றும் இதை இந்தியா எப்போதும் ஏற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran