வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (15:04 IST)

உத்தர பிரதேசம் புறப்பட்டார் ராகுல்காந்தி; தமிழக எம்.பிக்களும் உடன் பயணம்!

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதி ராகுல் காந்தி முன்னதாக சென்றபோது தடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஹத்ராஸ் புறப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும், இளம்பெண்ணின் உறவினர்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்திற்கு செல்ல முயன்றபோது தடுக்கப்பட்டதும், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் உத்தர பிரதேசம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் உத்தர பிரதேசத்திற்கு ராகுல்காந்தி தனது காரில் புறப்பட்டுள்ளார். அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் செல்லும் நிலையில் அவர்களுடன் தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரும் செல்கின்றனர்.