Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு: ராகுல்காந்திக்கு தலைவர்கள் பாராட்டு

Last Modified ஞாயிறு, 11 மார்ச் 2018 (11:33 IST)
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, 'ராஜீவ் கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டதாகவும், பிரபாகரனுக்காகவும் அவருடைய குழந்தைகளுக்காகவும் தான் வருந்தியதாகவும் தெரிவித்தார். ராகுல்காந்தியின் இந்த திடீர் மாற்றம் அரசியல் கட்சி தலைவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அவரை இதுவரை விமர்சனம் செய்தவர்கள் கூட இந்த கருத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருக்கும் கருத்தை வரவேற்கிறேன் ராகுல் கருத்து சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய உதவும் என நம்புகிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

ராகுல்காந்தியின் இந்த கருத்தை அடுத்து சட்டத்தில் வழிவகை இருந்தால் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம் என்றும் 7 பேர் விடுதலை தொடர்பாக நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :