1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (13:35 IST)

ரஃபேல் குடுத்துட்டாங்க.. ஏவுகணையை மறந்துட்டாங்க! – நடவடிக்கை எடுக்க சிஏஜி அறிக்கை!

பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்ட நிலையில் அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் வாங்கப்பட்டுள்ள அதிநவீன ரஃபேல் ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதற்கான ஏவுகணைகள் மற்றும் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டிய எம்பிடிஏ நிறுவனம் இன்னமும் அதை வழங்காமல் இருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் விமானத்தில் பொருத்தும் ஏவுகணை ஆகியவை தொடர்பான உயர்தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு குழுவிற்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் நினைவூட்டல்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தேஜஸ் விமானத்திற்கு எஞ்சின் தயாரிப்பு பணிக்கான தொழில்நுட்பத்தை பிரான்ஸ் இன்னமும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.