1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:09 IST)

காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கு ஹேக்: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

congress
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்யப்பட்டு அதில் கார்ட்டூன் படங்கள் பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த பரபரப்பு முடிவதற்குள் தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் வர்த்தக விளம்பரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது