Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறையில் சலுகை ; அடுத்த வாரமே அறிக்கை தாக்கல் ; சசிகலாவிற்கு சிக்கல்?

வெள்ளி, 14 ஜூலை 2017 (17:38 IST)

Widgets Magazine

பெங்களூர் சிறையில் சசிகலா உட்பட சிலருக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், அடுத்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா நேற்று பரபரப்பு புகார் அளித்தார். 
 
இதனையடுத்து, இதுபற்றி விசாரணை செய்ய கர்நாடக உள்துறை முன்னாள் ஐஏஸ் அதிகாரி வினய்குமாரை, அந்த மாநில முதலமைச்சர் சித்தராமய்யா நியமித்தார்.
 
இந்நிலையில், இந்த விசாரணை குறித்த முதல் கட்ட அறிக்கையை, அடுத்த வாரமே வினய்குமார் தாக்கல் செய்வார் எனவும் முழு விசாரணை ஒரு மாதத்திற்குள் அவர் தாக்கல் செய்வார் எனவும்  சித்தராமய்யா அறிவித்துள்ளார். 
 
அடுத்த வாரம் இந்த அறிக்கை வெளியாவதால், சசிகலாவிற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மனநோயாளி கையில் கத்தி - 8 வயது சிறுவன் பலி

கேரளாவில் மன நோயாளி ஒருவர், சிறுவனை கத்தியால் குத்தியதால், அந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் ...

news

சசிகலாவுக்கு எதிராக கங்கணம் கட்டி களத்தில் குதித்த ரூபாவுக்கு கிரண் பேடி வாழ்த்து!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் தனி சமையலறை உள்ளிட்ட பல ...

news

புதிய கேலக்ஸியை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!!

பூமியில் இருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மாபெரும் கேலக்ஸி இருப்பதை கண்டறிந்து ...

news

சசிகலா கொடுத்த 2 கோடி: பதில் சொல்ல ஓபிஎஸ் மறுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனக்கு சிறப்பு வசதிகள் வழங்க ...

Widgets Magazine Widgets Magazine