வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2017 (12:40 IST)

காந்தி படம் இல்லாமல் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர். ஏ.டி.எம்.களில் தற்போது ரூ.4,500 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டும் எந்த பலனும் இல்லை. காரணம் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இருப்பே இல்லை. ரிசர்வ் வங்கியும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு புதிய ரூபாய் தாள்களை அச்சடித்துவருகிறது. இதில் புதிய தாள்களில் சில் நேரங்களில் அச்சுப்பிழையுடன் வெளிவருகிறது.


 


மத்திய பிரதேசத்தில் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியிலிலிருந்து வி நியோகிக்கப்பட்ட ரூ.2000 தாள்களில் காந்தி படமே இல்லாமல் இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் கள்ளநோட்டு என நினைத்து வங்கி அதிகாரிகளிடம் காண்பித்தனர். இவை அச்சுபிழை என்றும், கள்ளநோட்டு கிடையாது என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி  அந்த நோட்டுகளை உடனடியாக திரும்பப்பெற்றுக்கொண்ட அதிகாரிகள் வேறு ரூபாய் நோட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.