விமானி ’அபிநந்தனுக்கு ’ பிரதமர் மோடி புகழாரம்

modi
Last Modified சனி, 2 மார்ச் 2019 (16:56 IST)
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கட்டுமானத்துறை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி  வைத்து பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
 
இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கிக்கொண்டுள்ளது. அகராதியில் உள்ள சொற்களின் அர்த்தத்தையே மாற்றும் ஆற்றல் நம் இந்தியாவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
 
நம் தாய்மண்ணை வந்தடைந்துள்ளார் அபிநந்தன்.  அபிநந்தன் என்னும் பெயர்  வரவேற்பதற்கும், வாழ்வதற்குமான வார்த்தையாக மாறியிருக்கிறது என்று தெரிவித்தார்.
 
மேலும், நம் நாடு பலமிக்க ஆற்றல் மிக்கநாடு, தீரமிக்க நாடாக உள்ளது. அதனால் தன்னம்பிக்கையுடன் நடைபோடுவோம்.
abhinandan

உலகமே போற்றக்கூடிய நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்பதையும்,  ஒட்டுமொத்த நாடுமே கொண்டாடுகிற இந்திய விமானப்படை வீரரான விமானியாக அபிநந்தனை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் பேச்சுக்கு பலத்த கைதட்டல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :