1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (19:37 IST)

ஒரே நாளில் 3 ரயில் விபத்துக்கள்: ரயில்வே அமைச்சகத்திற்கு நெருக்கம்!!

நேற்று ஒரே நாளில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3 ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இது ரயில்வே அமைச்சகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் சோன்பத்ரா மாவட்டம் ஓப்ரா அணை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன. 
 
அதேபோல், பகல் 11.45 மணியளவில், ராஜ்தானி விரைவு ரயிலின் இன்ஜினும் பவர் கோச்சும் மின்டோ பாலம் அருகே தடம் புரண்டன மற்றும் மகாராஷ்டிராவில் கண்டலா அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. 
 
இந்த மூன்று விபத்துகளிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும் ரயில்வே அமைச்சகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிக ரயில் விபத்துக்கள் காரணமாக ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 
 
பின்னர் ரயில்வே துறையின் புதிய அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்றார். அமைச்சர்கள் மாற்றப்பட்டாலும் விபத்துக்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது மக்களின் மன ஓட்டமாகவுள்ளது.