வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மே 2024 (13:28 IST)

அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு முதல் முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன ’
 
கடந்த ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது குடியரசுத் தலைவர் இந்த விழாவில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் தற்போது அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீ ராமர் கோயில் மற்றும் குபேர விழாவில் தரிசனம், சாயூ பூஜை மற்றும் ஆரத்தி செய்வார் என்று கூறப்பட்டுள்ளது,
 
Edited by Siva