வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (20:55 IST)

மரண தண்டனைக்கு எதிரானவர் அப்துல் கலாம்

இந்தியாவில் மரண தண்டனை இருக்கலாமா, கூடாதா என்ற விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மரண தண்டனை வேண்டாம் என்ற கருத்தை வெளிப்படுத்தியவர் டாக்டர் அப்துல் கலாம்.
 

 
மரண தண்டனை தொடர்பாக அப்துல் கலாம் உட்பட பலரது கருத்துகளை சட்ட ஆணையம் கேட்டிருந்தது. இதற்கு மரண தண்டனை நீடிக்க வேண்டும் என்றே பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அப்துல் கலாம் உள்ளிட்ட சிலர் மட்டுமே மரண தண்டனை வேண்டாம் என பதில் அளித்திருந்தனர்.
 
இதுகுறித்து அப்துல் கலாம் அளித்துள்ள பதிலில், “நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி நிறைய கருணை மனுக்கள் வரும். இவற்றில் பெரும்பாலானவற்றில் முடிவு எடுப்பதில் மிகுந்த வலியை உணர்ந்தேன். எனது பதவிக் காலத்தில் மிகவும் கடினமான பணிகளில் ஒன்றாக அது இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.