வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:43 IST)

மேலும் மோசமான பிரனாப் முகர்ஜியின் உடல்நிலை – ராணுவ மருத்துவமனை தகவல்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஜனாதிபதியாக 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முதல் 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி வரை பதவி வகித்தவர் பிரனாப் முகர்ஜி. இவர் மருத்துவமனையில் வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகள் செய்துகொள்ளும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரு நாட்கள் கடந்துள்ல நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு வெண்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் அவர் கோமா நிலையை தாண்டவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.