முன்னாள் பிரதமர் பேரனின் ஆபாச வீடியோ.. நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்..!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் திடீரென ஜெர்மனி நாட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா என்பவரின் ஆபாச வீடியோக்கள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் திடீரென வெளியானதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இவர் பாஜக கூட்டணி வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் மீது மாநில அரசு விசாரணை கமிஷன் அமைந்துள்ள நிலையில் திடீரென அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தற்போது அவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
கடந்த 26 ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் தான் இந்த ஆபாச வீடியோ வெளியனாது என்பதும் இது எதிர்க்கட்சிகளின் சதி என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டு வருகிறது
Edited by Siva