பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி தற்கொலை


Murugan| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:59 IST)
ஆந்திராவை சேர்ந்த காமெடி நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜபர்தஸ்த் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பொட்டி ரமேஷ்.  இவர் திரிபுரம்பிகா(22) என்ற பெண்ணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். விசாகப்பட்டினத்தில் உள்ள ரமேஷின் வீட்டில், கூட்டு குடும்பமாக அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை இரவு திரிபுரம்பிகா அந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்ட ரமேஷின் சகோதரி அலறியடித்துக் கொண்டு,  குடும்பத்தாரை அழைத்துள்ளார்.


 

 
அவர்கள் ஓடி வந்து பூட்டியிருந்த அறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று திரிபுரம்பிகாவை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
 
ரமேஷின் குடும்பத்தினர், தங்கள் மகளை கொடுமைப் படுத்தி வந்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என திரிபுரம்பிகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
வழக்குப்பதிவு செய்த போலிசார், ரமேஷின் குடும்பத்தினரை விசாரணை செய்து வருகிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :