ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (17:50 IST)

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு-ECI கட்டுப்பாடு

Election Commission
மக்களவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
 
மக்களவை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.   பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் பணப்பாடுவாடாவை தவிர்க்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது.
இந்த நிலையில்,  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
 
அதில்,  மக்களவை மற்றும் 4 மா நில சட்டப்பேரவை  தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1 ஆம் தேதி மாலை 6:30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்த, முடிவுகளை வெளியிட அனைத்து ஊடகங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.  தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதால், ஒரு பகுதியில் வெளியாகும் கருத்துக் கணிப்பு தேர்தல் நடக்கும் மற்ற பகுதிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகிறது.