1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (22:39 IST)

பிரபல மேட்ரிமோனி ஆப்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்.! கூகுள் அதிரடி நடவடிக்கை..!!

Google
சேவைக் கட்டண பிரச்சினையில் பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட 10 நிறுவனங்களின் செயலிகளை கூகுள், தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.
 
பிளே ஸ்டோரில் சொல்போன் செயலி பயன்பாடு தொடர்பாக நிறுவனங்களுக்கு 15 % முதல் 30 % வரை கட்டணம் வசூலிக்கும் முந்தைய முறையை நீக்க கூகுளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பயன்பாட்டு சேவை கட்டணத்தை 11 % முதல் 26 % விதிக்கும் முறையை கூகுள் கொண்டு வந்தது. இதன் காரணமாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், கூகுளுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.
 
இந்நிலையில், கட்டணம் வசூலிப்பது அல்லது சேவையை விலக்கிக்கொள்வது என்ற முடிவை செயல்படுத்த கூகுள் தீவிரம் காட்டியது. இதனை எதிர்த்து கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் அடுத்தடுத்து கூகுள் இரண்டு வழக்குகளை எதிர்கொண்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவான தீர்ப்புகள் நீதிமன்றத்தில் கிடைக்கப் பெறவில்லை. 


இந்நிலையில், கூகுள் இந்தியா, பிளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக சில நிறுவன செயலிகளை நீக்கியது. அதன்படி, மேட்ரிமோனி.காம், பாரத் மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, முஸ்லிம் மேட்ரிமோனி, ஜோடி ஆகிய செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.