செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2022 (19:05 IST)

ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று அரசியல் மட்டுமே பேசுகிறார்: அமைச்சர் பொன்முடி

Ponmudi
ஆளுநர் கல்லூரியில் கல்வியை தவிர்த்து அரசியல் மட்டுமே பேசுகிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியபோது தமிழக முதலமைச்சர் உயர்கல்வித் துறையில் ஆய்வு நடத்த வேண்டும் என்று அறிவுரை கூறியதை அடுத்து தற்போது ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது
 
இந்த ஆண்டு அண்ணா பல்கலை சேர்ந்த பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினார் 
 
மேலும் ஆளுநர் அவர்கள் தனது வேலையை செய்யாமல் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அவர் கல்லூரிகளுக்கு சென்று என்ன பேசுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். கல்வியை தவிர்த்து அவர் அரசியல் பற்றியே அதிகம் பேசுகிறார். அதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
 
Edited by Mahendran