1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 24 ஜூன் 2016 (20:47 IST)

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருணாநிதியுடன் சந்திப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயனசாமி திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.


 
புதுவையில் நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. நாராயணசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. 
 
இதனைத் தொடர்ந்து நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் 3 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து அவர்கள் வாழ்த்து பெற்றனர்.
 
மேலும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேசினர்.
 
இந்நிலையில், இன்று மாலை சென்னை வந்த அவர்கள், திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.