ஆளுநரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்..

Last Updated: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (22:05 IST)
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தனது செயல்பாடுகள், மேலும் பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவரது ட்விட்டர் கணக்கை 11 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், இன்று அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனை கிரண் பேடி வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்துள்ளார்.


கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல்கள் இருந்து வருகின்றன. மாநில உரிமைகளில் கிரண் பேடி தலையிடுகிறார் என்பது முதல்வர் நாராயணசாமியின் முக்கிய குற்றச்சாட்டாகும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :