1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 11 ஜூலை 2016 (19:52 IST)

பெண்கள் பாதுகாப்பின்மைக்கு குழந்தை வளர்ப்பு முறைதான் காரணம்: கிரண் பேடி

பெண்கள் பாதுகாப்பின்மைக்கு குழந்தைகள் வளர்ப்பு முறையே காரணமாக உள்ளது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார்.


 

 
வேலூர் மாவட்டத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்  மாணவ, மாணவிகள், பள்ளி முதல்வர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது மாணவ, மாணவிகள் பல்வேறு கேள்விகளுக்கு எழுப்பினர். அதைத்தொடர்ந்து பேசிய ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது;-
 
பெண்களின் பாதுகாப்பின்மைக்கு குழந்தைகளின் வளர்ப்பு முறையே காரணம். குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் உண்டு.
 
நான் எழுதிய Making of the top cop என்ற புத்தகத்தை குழந்தைகளாகிய நீங்க அனைவரும் படிக்க வேண்டும். அதில் என்னுடைய அனுபவங்கள் பல இடம் பெற்றுள்ளன. எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.
 
என் கடமைகளை நான் முழுமையாக செய்கிறேன். அதன் மூலம் மனநிறைவு அடைகிறேன். குழந்தைகள் ஓடி விளையாட வேண்டும். முக்கியமாக மாணவர்கள் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து போன்றவை விளையாட வேண்டும்.
 
உங்கள் பாடத்தையும் தாண்டி சாதனையாளர்கள் மற்றும் அறிஞர்களின் சுயசரிதையை படிக்க வேண்டும். ஏதேனும் ஓர் இசைக்கருவியை வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள். இசை உங்களுக்கு மன அமைதியையும், இன்பத்தையும் கொடுக்கும். நீங்கள் தினந்தோறும் ஒரு பக்கமாவது உங்கள் அனுபவங்களை பற்றி எழுத வேண்டும், என்றார்.