திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (08:46 IST)

பட்ஜெட்டால் காங்கிரஸுக்கு காய்ச்சல்: கண்டமேனிக்கு கலாய்க்கும் பொன்னார்!!

மத்திய அரசின்  பட்ஜெட்டை பார்த்து பாவம் காங்கிரஸுக்கு காய்ச்சலே வந்துவிட்டது என மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சிறுகுறு விவசாயிகள், சிறுகுறு வியாபாரிகளுக்கு ஆதரவாக அம்சங்கள் இருந்தது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக உள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பட்ஜெட் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு காய்ச்சல் வருவது போல்,  காங்கிரஸ்காரர்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட்டை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது என கிண்டல் செய்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெறும் என கூறினார்.