வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (14:50 IST)

போலீஸுக்கு கெட் அவுட்: குஷியில் ரயில் பயணிகள்!!

இனி பயணிகளிடம் ரயில் டிக்கெட் பரிசோதிக்க ரயில்வே போலீசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த இளைஞர் ஒருவரை ரயில்வே போலீஸார் துறத்தி பிடிக்க சென்ற போது, அந்த இளைஞர் ரயிலில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
 
இந்த சம்பவம் பெரும் சர்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனால், தற்போது இந்த முடிவை ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் தர்மேந்திர குமார் அறிவித்துள்ளார்.
 
மேலும், அவர் குறிப்பிட்டதாவது, ரயில்வே போலீசாரின் வேலை பயணிகளை பாதுகாப்பது மட்டுமே. பயணிகளின் டிக்கெட்டை பரிசோதிக்க ரயில்வே போலீசாருக்கு அனுமதி கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.