1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (23:30 IST)

பிரதமரை சந்திக்க விவசாயிகளை அழைத்து சென்ற காவலர் சஸ்பெண்ட்

தலைநகர் டெல்லியில் 28வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று உச்சகட்டமாக நிர்வாணமாக போராடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் விவசாயிகளை பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



 


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வரும் விவசாயிகளில் 8  பேர்களை பிரதமரை சந்திக்க வைப்பதாகச் சொல்லி மந்திர் மார்க் காவல் நிலைய போலீசார் பிரதமர் இல்லத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அய்யாகண்ணு தலைமையில் சென்ற எட்டு பேர்கள் பிரதமரை சந்திக்க அனுமதிக்கப்படாமல் பிரதமர் அலுவலகத்தில் அவர்களிடமிருந்து வெறும் மனு மட்டுமே பெறப்பட்டது.

இதனால், ஏமாற்றம் அடைந்த 3 விவசாயிகள் திடீரென பிரதமர் இல்லம் அருகே ஆடைகளைக் கழட்டிவிட்டு நிர்வாணமாக நின்று, விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்’ என ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பிரதமர் அலுவலகத்தின் அனுமதியின்றி விவசாயிகளை பிரதமர் சந்திக்க அழைத்து சென்ற தலைமை காவலர் பகதூர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. மேலும் நிர்வாணமாக போராட்டம் செய்த மூன்று விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.