1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2017 (11:27 IST)

பஞ்சாப் கலவரத்தில் காவல்துறையின் கோர முகம்: பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ!

பஞ்சாப் கலவரத்தில் காவல்துறையின் கோர முகம்: பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ!

சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங் பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
 
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீத் சிங் பாலியல் பலாத்காரம் வழக்கில் நேற்று குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக்காக ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார். அவருக்கான தண்டனை 28-ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் குர்மீத் ராம் ரஹிம் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள் கலவர பூமியாக மாறியுள்ளது.
 
ஹரியானாவில் இரண்டு ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகளுக்கு தீவைக்கப்பட்டது. கலவரத்தில் இதுவரை 25 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
பஞ்ச்குலாவில் சாமியாரின் ஆதரவாளர்கள் வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியதில் பதற்றம் அதிகரித்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 
 
மேலும் பஞ்ச்குலாவில் கலவரத்தில் ஈடுபட்ட ஒரு மீது போலீசார் துப்பாக்கியால் சுடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கலவரக்காரர்களை அடக்குவதற்கு பதிலாக காவல்துறையே அவர்களை சுடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
 
அதுமட்டுமல்லாமல் பஞ்ச்குலாவில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் காவல்துறை அத்துமீறி நடக்கிறது. கலவரத்தில் ஈடுபடாமல் அமைதியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மீதும் கண்மூடித்தனமாக லத்தியால் அடிக்கின்றனர். இந்த வீடியோவும் நமக்கு கிடைத்துள்ளது. கலவரம் போன்ற சம்பவங்கள் நடக்கும் போது காவல்துறையினர் கலவரக்காரர்களை விட மோசமாக கண்மூடித்தனமாக அரக்கத்தனமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது.