ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 12 மே 2016 (14:06 IST)

போ மோனே மோடி: கேரளாவில் வாங்கி கட்டிக்கொண்ட பிரதமர் மோடி

கேரளாவில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை கூறி கேரள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் டுவிட்டரில் கேரள மக்கள் பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.


 
 
கேரள தேர்தல் பிரச்சாரத்தில், கேரள பழங்குடி சமூகத்தின் மத்தியில் குழந்தைகள் இறப்பு விகிதம் சோமாலியாவை விட மோசமாக உள்ளது என பிரதமர் மோடி பேசினார். மோடியின் இந்த பேச்சு கேரளாவை அவமதிப்பதாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
 
மோடி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கூறுகின்றனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் பேச்சுக்கும் உண்மைக்கும்  எவ்வித தொடர்பும் இல்லை. உங்கள் கருத்து மக்களிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்தை திரும்ப பெற வேண்டும். ஒரு பிரதமர் தனது நாட்டில் சோமாலியா போன்ற ஒரு மாநிலம் இருப்பதாக கூறுவது வெட்கக் கேடானதாக இல்லையா? என்று எழுதியுள்ளார்.




 
 
மேலும் கேரள மக்கள் டுவிட்டரில் போ மகனே மோடி (#PoMoneModi) என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.